top of page
Marble Surface

கோவில்கள் விவரம் 

திருவண்ணாமலை மாவட்ட கோவில்கள் 
1
​அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில்

மாவட்டம்

திருவண்ணாமலை

வட்டம்

திருவண்ணாமலை

முக்கியத்துவம்

பஞ்சபூத தளங்களில் முக்கிய தளமான அக்னி தளம்

நகரம்/கிராமத்தின் பெயர்

திருவண்ணாமலை

திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில்-606601  

இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா
 
திருக்கோயில் பெயர்

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில்

மூலவர் பெயர்

அண்ணாமலையார், அருணாச்சலேஸ்வரர்

அம்பாள் பெயர்

அபிதகுஜாம்பாள், உண்ணாமுலையாள்  

உற்சவர் பெயர்

இதர சந்நிதிகள்

செந்தூரவிநாயகர்

முருகர்

கால பைரவர்

பிரதிஷ்டை விவரம்

சிவன் கோவில் எனில்

காரண, காமீகம்

பெருமாள் கோவில் எனில்

பாஞ்சராத்திரம்/வைகானசம்

முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது

விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரிவன் என்ற போட்டி

ஏற்பட்ட து. சிவபெருமானிடம் இருவரும் சென்று கூற அவரோ யார் எனது அடி

முடியை க் கண்டு வருகிறீர்க ளோ அவர்தா ன் பெரியவர் என்று தெரிவித்து

விட்டா ர்.ஜோதிப் பிளம்பாக சிவபெருமான் காட்சி தந்தார். அந்த ஜோதியே

நெருப்பு மலையாக மாறியது. இதுவே கோயிலின் பின்னணியிலுள்ள

திருவண்ணாமலையாகும்.

சிவனின் அடியை காண்பதற்காக, விஷ்ணுவராக(பன்றி)அவதாரமெடுத்து

பூமிக்குள் சென்றார். அது போய்க் கொண்டே இருந்தது. திரும்பி வந்து

முடியவில்லை என்று சிவபெருமானிடம் ஒப்புக்கொ ண்டார். அடுத்ததாக

பிரம்மா, அன்னப்பறவை உருவெடுத்து சிவபெருமானின் முடியை கண்டு வர

கிளம்பிப்போனவர், அது முடியாது எனத் தெரிந்தவுடன் திரும்ப வந்து

தாழம்பூவை சாட்சி சொல்ல வைத்து சிவபெருமானிடம் தான் தங்களது

முடியைக் கண்டேன் என்றார்.பிரம்மன் பொய் சொன்னது அறிந்து உனக்கு

பூமியில் கோயிலோ பூஜையோ கிடையாது என சாபமிட்டா ர்.விஷ்ணு

உண்மையை கூறியதால் தனக்கு சமமாக பூமியில் கோயிலும் பூஜையும்

கிடைக்க வரம் அளித்தார்.பொய் சொன்ன தாழம்பூவை தன்னை

தீண்டக்கூடாது என்று சபித்தார். அதனால்தான் இன்றும் சிவதலங்கள்

எதிலுமே தாழம்பூவை மட்டு ம் படைக்கவே மாட்டா ர்க ள். அத்து டன் மற்றொரு

வரலாறும் இத்தலத்திற்கு உண்டு.

பிருங்கி முனிவர் தியை வணங்காமல் சிவனை மட்டு மே வணங்கி வந்தார்.

அவருக்கு, சிவமும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த் து வதற்காக சிவன்

அம்பிகை யை பிரிவது போல ஒரு லீலை நிகழ்த்தினார். அவள் இத்தலத்தில்

அவருடன் மீண்டும் இணைய தவமிருந்தாள்.

அவளுக்கு காட்சி தந்த சிவன், தனது இடது பாகத்தில் ஏற்று,

அர்த் த் நாரீஸ் ஸ் வரராக காட்சி கொடுத்தார். பிருங்கி உண்மையை உணர்ந் ந்தார்.

இந்நிகழ்வு ஒரு சிவராத்திரி நாளில் நிகழ்ந்தது. இவ்வாறு சிவன்

அர்த் த் நாரீஸ் ஸ் வர வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான

பெருமையை உடைய தலம் இது.

ஸ்தல விருட்சம்

மகிழமரம்

திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்

தீர்த்தம்: பிரம்மதீர்த்தம், சிவகங்கை

திருக்குளம்:

பூந்தோட்டம்:

பசுமடம்     :

பஜனைமடம்:

இதரவகை   :

பிராசீனமான உபகோயில்கள்

அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்

அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது

உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்

அர்ச்சகர் விவரம்:  சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்

+91-4175 252 438. 254 425

அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்

திருகோயில் நித்திய பூஜை விவரம்

கோயில் திறந்திருக்கும் நேரம்
 
காலை:05:00-12:30   மாலை:03:30-09:30
 
ஸ்தல வரலாறு
 
*லிங்கமே மலையாக அமைந்த மலை *தென்னிந்தியாவின் மிகச் சிறந்த

சிவதலமாக திகழும் சிவ தலம் *பஞ்சபூதம் தலங்களில் முக்கியமான அக்னி

தலம் இது. *நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலை என சிறப்பு

பெற்ற தலம். *நான் என்ற அகந்தை அழிந்த தலம் *உண்ணாமுலையம்மன்

சிவபெருமானிடம் இடப்பாகம் பெற கிரிவலம் வந்து தவம் செய்த தலம்

*பார்வ திக்கு சிவபெருமான் தன் உடம்பில் சரிபாதியாக இடப்பாகம் தந்து

ஜோதி சொரூபமாய் காட்சி தந்த தலம். *அருணகிரிநாதர் பிறந்து வளர்ந் ந்து

வாழ்ந்து முக்தி அடைந்த தலம் *அருணகிரிநாதர் வாழ்க்கை வெறுப்புற்று

தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது முருகனே வந்து காப்பாற்றி

திருப்புகழ் பாட உத்தரவிட்ட தலம் *எல்லா சிவதலத்திலும் மூலவர்

பின்புறமுள்ள லிங்கோத்பவர் தோன்றிய தலம். *9 கோபுரம் 7

பிரகாரங்களுடன் 25 ஏக்கரில் அமைந்துள்ள மிகப்பெரிய தலம்

*தென்னிந்தியாவிலேயே 2 வது உயரமான கோபுரம்(217 அடி) கொண்ட

அற்புத அழகு கொண்ட தலம். *தமிழகத்தின் திருப்பதி என்று

போற்றப்படுமளவுக்கு லட்சோ பலட்ச ம் பக்தர்க ள் தினந்தோறும் வந்து

வழிபடும் அதி அற்புத சக்தி வாய்ந்த சிவ தலம். *6 ம் நூற்றாண்டில்

கட்ட ப்பட்ட கோயில் இது. சேர சோழ பாண்டிய வைசாள மன்னர்க ளால்

பல்வேறு காலகட்ட ங்களில் திருப்பணி செய்யப்பட்ட மிகப்பழமையான

திருக்கோயில் இது. *ஏராளமான சித்தர்க ள் வாழ்ந்த தற்போதும் வாழ்ந்து

கொண்டிருக்கும் சிறப்பு வாய்ந்த மலை. *சேஷாத்திரி சுவாமிகள், ரமணமகரிஷி, விசிறி சாமியார் போன்ற எண்ணற்ற ஞானிகள் வாழ்ந்து

முக்தியடைந்த தலம் கிரிவல சிறப்பு : கார்த் த்திகை மாதம் கிருத்திகை

நாளன்றுதான் பார்வ திக்கு சிவன் இடப்பாகம் அளித்தார் என்பதால்

அன்றைய தினம் சுற்றுவது சிறப்பு, முனிவர்க ளும் ஞானிகளும் சித்தர்க ளும்

ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பின்போதும் பிரதோச காலத்திலும் மலை வலம்

வந்தார்க ளாம். எனவே அந்த நாளில் கிரிவலம் சுற்றுவது நல்லது. சந்திரன்

பவுர்ண மி அன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகஅளவில்

பெற்று பூர்ண நிலவாக சந்திரன் நிறைந்த உயிர்ச க்திகளை

தருகிறார்.இதனால் பவுர்ண மி அன்று கிரிவலம் வருதல் நல்லது. இந்த

கோயில் அக்னி கோயில். அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை. இந்த

கோயிலில் செவ்வாய் கிழமை அன்று மட்டு ம் சிறப்பு பூஜைகள்

நடக்கும்.அன்றும் கிரிவலம் வரலாம். ஞாயிறு சிவபதவிகள் கிடைக்கும்

திங்கள் இந்திர பதவி கிடைக்கும் செவ்வாய் கடன் வறுமை நீங்கும்,

தொடர்ந் ந்து வரும் ஏழு பிறப்புகளையும் நீக்கி சுபிட்ச ம் பெறலாம். புதன்

கலைகளில் தேர்ச் சி யும் முக்தியும் பெறலாம் வியாழன் ஞானிகளுக்கு

ஒப்பான நிலையை அடையலாம் வெள்ளி விஷ்ணுபதம் அடையலாம் சன நவகிரகங்களை வழிபட்ட தன் பயன் கிடைக்கும். அம்மாவாசை மனதில்

உள்ள கவலைகள் போகும். மனநிம்மதி கிடைக்கும். 48 நாட்க ள் விரதமிருந்து

அதிகாலையில் கணவனும் மனைவியும் நீராடி மலை வலம் வந்தால்

மகப்பேறு கிடைக்கும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது அருணைசக்தி

பீடம் ஆகும். முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும்

தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில்

கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர்

சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற

274 சிவாலயங்களில் இது 233 வது தேவாரத்தலம் ஆகும.

கார்த் த்திகை மாதம் பிரம்மோற்சவம் கார்த் த்திகை தீபம் 10 நாட்க ள் திருவிழா,

மாசி மகா சிவராத்திரி *தை மாதம் மாட்டு ப்பொங்கல் திருவூடல் உற்சவம்

சுவாமி ஊஞ்சல் ஆடும் உற்சவம் *மாதா மாதம் இத்தலத்தில் பிரம்மோற்சவம்

நடைபெறும். *இங்கு ஆடிப்பூரம் அன்று தீ மிதி திருவிழா அம்மன் சன்னதி

முன்பாக நடக்கும் இது போல் வேறு எந்த சிவ தலத்திலும் தீ மிதி திருவிழா

நடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. *தினசரி 6 கால பூஜை *மாசி

மகத்தன்று பள்ளி கொண்டாபட்டு என்ற ஊருக்கு சுவாமி சென்று ஆற்றில்

தீர்த் த் வாரி செய்து வருவார்.(சிவபெருமானே வள்ளாள மகராஜனுக்கு

பிள்ளையாக பிறந்து அவர் இறந்தவுடன் ஈமக்கிரியை செய்த வரலாற்றைக்

குறிப்பது இத்திருவிழா) *தை மாதம் 5 ந் தேதி சுவாமி சுற்றுவட்டா ரக்

கோயில்களில் காட்சி தருவார். அதன்படி தை மாதம் 5ந்தேதி மணலூர் பேட்

என்ற ஊருக்கு சென்று சுவாமி காட்சி தருவார். *தை மாதம் ரதசப்தமி அன்று

கலசப்பாக்கம் என்ற ஊரில் அண்ணாமலையார் காட்சி தருவார். *பங்குனி

உத்திரம் திருக்கல்யாணஉற்சவம் 6 நாட்க ள் *வருடத்தின் அனைத்து

மாதங்களிலும் ஏதாவது திருவிழா இத்தலத்தில் நடந்த வண்ணமே இருக்கும்.

*ஒவ்வொரு மாதமும் பிரதோசம் மிகவும் சிறப்பாக நடைபெறும். *தீபாவளி,

பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களில் விசேச பூஜைகள். ரொம்ப

ரொம்ப சிறந்த மாதங்கள்: ஐப்பசி, கார்த் த்திகை , மார்க ழியில் எல்லா

நாட்க ளும் வலம் வரலாம். இவை மிகச்சி றந்த மாதங்கள் என்கிறார்க ள்

பெரியவர்க ள்.

திருவிழா நாட்க ளில் திட்டி வாசல் வழியே உற்சவமூர்த் த்திகள் வெளிவருவதும்

இவ்வாலயத்தில் மட்டு ம்தான். அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும்

இதுதான்.

கிளி கோபுரம் (81 அடி உயரம்);

தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்),

தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்);

மேற்கே பேய் கோபுரம் (160 அடி உயரம்),

மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்);

வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்),

வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்).

கார்த்திகை ஜோதி மகத்துவம்: அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சு மி தேவியின் வடிவத்தை யும்

(சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தை யும் (ஒளி), பார்வ தியின் சக்தியையும்

(வெப்பம்) ஒன்றாக சேர்த் த் து. திருவிளக்கு தீபச்சு டரில் மூன்று தேவிகளின்

வடிவத்தை காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி.

எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது.

கார்த் த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டா ல், சிவனின் அருளுடன், மூன்று

தேவியரின் அருளும் சேர்ந் ந்து கிடைக்கும். தீப ஒளி தீய சிந்தனைகள்

ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு

பாகத்தில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான்

வாசம் செய்கின்றனர். வேத புராணங்களும் கூட விளக்கேற்றுவதால் மிகச்

சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்க ள்,

கோயில்களில் தீபம் ஏற்றுவதை யே மிகச் சிறந்த திருப்பணியாகச்

செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வா ன பலன் தரும்

என்றாலும், கார்த் த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும்,

இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும்

தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள்,

இடையூறுகளையும் ஏழரை சனி, அஷ்டமச்ச னி போன்றவற்றால் ஏற்படக்

கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை

அருளும் என்பது நம்பிக்கை . சிவபெருமானே மலையாகி நிற்கும்

அண்ணாமலையின் உச்சி யில் மகாதீப வடிவில் காட்சி தரும்

சிவபெருமானை வணங்கி வளமான வாழ்வு பெறுவோம்.

உமைக்கு இடபாகம் கொடுத்த ஈசன்: திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை

தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி

விளையாட்டா க மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது. அனைத்து

ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன. இதனால் ஏற்பட்ட பாவத்தை

போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை

காமாட்சி யாக தவம் இருந்தாள். ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான்

அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போ டு சேர்த் து அணைத்தார்

அன்னை காமாட்சி . இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான்

நீக்கினார். அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள்

திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என சக்தி வேண்டினார்.

அதற்கு சிவபெருமான், அண்ணாலை சென்று தவம் செய் என உத்தரவிட்டா ர்.

அவ்வாறே உமையும் தவம் செய்தாள். கார்த் த்திகை மாதத்தில் பவுர்ண மியும், கிருத்திகை யும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி ஒன்று

உண்டானது. அப்போது மலையை இடதுபுறமாக சுற்றிவா என அசரீரி

ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது

மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொ ண்ட சிவபெருமான்

அர்த் த் நாரீஸ் ஸ் வரராக காட்சி யளித்தார். இதை யும் நினைவுகூர்ந் ந்தே

அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க

மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில்

கல் மலையாகவும் திகழ்கிறது. மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்ட ர்).

கிரிவலப் பாதை யின் துõரம் 14 கிலோமீட்ட ர். இப்பாதை யில் 20

ஆசிரமங்களும், 360 தீர்த் த் ங்களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும்

உள்ளன. 26 சித்தர்க ள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது

என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த் த்தால் ஒவ்வொரு வகை

தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.

மலையளவு பயன்: நரசிம்மர் இரணிய வதம் செய்தபோது, அருகிலிருந்த

சிறுபாலகனான பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை.

காரணம் இரணியன் மனைவி கர்ப் ப் மாக இருந்தபோது நாரதர்

யோசனைப்படி கிரிவலம் வந்தாள். அப்போது பெய்த அமுத மழைத் துளி

மலைமீதுபட்டு அவள் வயிற்றில் பட்ட து. அது குழந்தை க்கு தக்கபலம்

கொடுத்ததால்தான் இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது.

கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால் முதல் அடிக்கு ஒரு

யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த

பலனும், மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும்

கிட்டு ம். திருவண்ணாமலை என உச்ச ரித்தாலே ஐந்தெழுத்தை மூன்று கோடி

முறை உச்ச ரித்த பலன் கிட்டு ம். மகாதீப தரிசனம் கண்டால், அவர்க ளின் 21

தலை முறையினருக்கும் புண்ணியம் கிட்டு ம். கிரிவலப் பாதை யிலுள்ள

இடுக்குப் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்று வாயில்கள்- நேர்க் க்கோட்டி ல்

இருக்காது. இதன்வழியே படுத்து நெளிந்து, வளைந்துதான் வெளிவர

வேண்டும்.

இதனால் குழந்தை ப்பேறு கிட்டு ம்; கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

மலையின் கிழக்கே இந்திரலிங்கம், தென் கிழக்கே அக்னிலிங்கம், தெற்கே

எமலிங்கம், தென்மேற்கே நிருதிலிங்கம், மேற்கே வருணலிங்கம், வடமேற்கே

வாயுலிங்கம், வடக்கே குபேரலிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம்

அமைந்துள்ளன. இந்த எட்டு லிங்க தரிசனம் முடிக்கவும் கிரிவலமும் முடிந்துவிடும். பாவம் போக்கும் அண்ணாமலை திருப்பாதம்! கோபுர

தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு. அதை ப்போன்றே

இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம்

தீர்க் க்கும் என்பது ஐதீகம். திருஅண்ணாமலையார் கோயிலில்

அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது. கோயிலுக்கு உள்ளே பே

கோபுரத்து க்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது. அடி முடி

காணாத பரம் பொருளின் பாத தரிசனம் காணவேண்டி அடியார்க ளும்,

அருளாளர்க ளும் மேற்கொண்ட கடும் தவத்தின் பயனாக விஸ்வரூப

மூர்த் த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் அமைந்துள்ளதே

திருப்பாதம். அண்ணாமலையார் பாதம் தனி சன்னதியாக அமைந்துள்ளது.

கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்க ள் தவறாமல் பாத தரிசனம் செய்வது

நன்மை தரும். பாத தரிசன சன்னதியில் தினமும் மலர் அலங்காரத்து டன்

சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. பாதத்தை சுற்றியுள்ள துõண்களில்

விநாயகர், முருகர், கோதண்டராமர், சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி

தருகின்றன. மேலும் மலை உச்சி யிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம்

அமைந்திருக்கிறது. தீபம் ஏற்றப்படும் மலை உச்சி யின் வலது புறத்தில் பாத

தரிசனத்தை நாம் காணலாம். திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து

பேறு பெற்ற சித்தர்க ள், மகான்கள், அருளாளர்க ள் ஏராளம். அவர்க ளில்

இடைக்காட்டு சித்தர், அருணகிரிநாதர், ஈசான்ய ஞானதேசிகர், குரு

நமச்சி வாயர், குகை நமச்சி வாயர், ரமணமகரிஷி, தெய்வசிகாமணி

தேசிகர், விருப்பாட்சி முனிவர், சேஷாத்ரி சுவாமிகள், இசக்கிசாமியார்,

விசிறி சாமியார், அம்மணியம்மன், கணபதி சாஸ்திரி, சடைசாமிகள்,

தண்டபாணி சுவாமி, கண்ணாடி சாமியார், சடைச்சி அம்மாள், பத்ராசல

சுவாமி, சை வ எல்லப்பநாவலர், பாணி பத்தர் உள்ளிட்ட வர்க ள்

முக்கியமானவர்க ள்.

260 கோடி வயது: திருவண்ணாமலையை ஆர்க் க்கேயன் காலத்தியது

என்கிறார்க ள். அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட து.

இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்ட து என்கிறார்க ள்

ஆராய்ச்சி யாளர்க ள். திருவண்ணாமலையின் வயதை இவர்க ள் 260 கோடி

ஆண்டுகள் என்று மதிப்பிட்டு ள்ளார்க ள். இது உலகிலேயே மிகப்பழமையான

மலை என்று, டாக்டர் பீர்பா ல் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்து ள்ளார்.

முதல் கணக்கெ டுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி.

ஆறுவிரல் ஆறுமுகம்: திருவண்ணாமலை திருப்புகழ் புலவர்அருணகிரியாருக்கு கை களில் ஆறுவிரல் இருந்தது. அவர் ஆறுமுக பக்தர்என்பதால், அந்த முருகனே அவருக்கு அப்படி கொடுத்தான் போலும்! அவர்

கால்களை சற்று உயர்த் த்தி எக்கி நடப்பார். அந்த நடை மயில்போல

இருக்குமாம்! முருகனின் வாகனத்தை இது நினைவுபடுத்தியது.

கண்ணொளி கீரையும் உண்ணாமுலையாளும்: பொன்னாங்கண்ணி

கீரை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது என்பார்க ள் சித்த வைத்தியத்தில்!

இதை அழுத்தம் திருத்தமாக இந்தப் பகுதி மக்கள் இளசுகளுக்கு எடுத்து ச்

சொல்வதற்காக, பொன்னாங்கண்ணியை புளிபோட்டு கடைஞ்சா

உண்ணாமுலை தாயே ஓடி வந்து சாப்பிடுவா! என்கிறார்க ள். இப்படி

சொன்னால் தான், இளசுகள் அம்பாளே விரும்பும் கீரையாயிற்றே என்று

விரும்பிச் சாப்பிடுவார்க ளாம்.

மீனின் பெயர்செல்லாக்காசு: திருவண்ணாமலையிலுள்ள ரமணர்

ஆஸ்ரமம் அருகேயுள்ள தீர்த் த் த்தை அகத்தியர் தீர்த்த்ம் என்பர். இது

இருக்கும் இடத்தின் பெயர் பலாக்கொத்து . இதில் வசிக்கும் மீனின் பெயர்

செல்லாக்காசு. அடேங்கப்பா! இப்படி ஒரு பெயர் வைக்க என்ன காரணம்

என்று கேட்டா ல், இது அந்தக்காலத்து மீன் சாமி! அபூர்வ இனம் சாமி, என்ற

பதில் மட்டும் தான் கிடைக்கிறது.

நகைகள் இல்லாத கோயிலா?

ஆக்ராஹாரம் உள்ளதா?

ஆம்:        இல்லை:

எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?

சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?

இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்

பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை

அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்

கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்

இதர குறிப்புகள்

இத்தலத்தில் வழிபட்டா ல் மனத்து யரம் நீங்கும்.கேட்கு ம் வரங்களை எல்லாம்

தரும் மூர்த் த்தியாக அருணாச்ச லேசுவரர் உள்ளார். கல்யாணவரம்

வேண்டுவோர் , குழந்தை வரம் வேண்டுவோர், வியாபாரத்தில்

விருத்தியடைய விரும்புவோர், உத்தியோக உயர்வு வேண்டுவோர்.,

வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்பு வேண்டுவோர் என்று எந்த

வேண்டுதல் என்றாலும் இத்தலத்து ஈசனிடம் முறையிட்டா ல் நிச்சயம்

நிறைவேறும் என்பது நம்பிக்கை .

----------------------------------------------------------------------------------------------------------------

2

வள்ளி தேவசேனா சமேத சுயம்பு சிவசுப்ரமணியர்   திருக்கோயில்

மாவட்டம் ​

​திருவண்ணாமலை 

வட்டம்

கலசப்பாக்கம் 

முக்கியத்துவம்

27 நட்சத்திரங்கள் பூஜித்தது. சுயம்பு ரூபாமாக இருக்கிறார்.

நகரம்/கிராமத்தின் பெயர்

எலத்தூர், மோட்டூர், நட்சத்திரக்கோயில் 

திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்

​திருவண்ணமலயிலிருந்து வேலூர் செல்லும் சாலையில் உள்ள காலசப்பக்கத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் 

இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா
போளூர் 12 கி. மீ. தொலைவில் உள்ளது 

திருக்கோயில் பெயர்

வல்லிதேவசேனா சமேத சுயம்பு சிவசுப்பிரமணியர் ஆலயம் 

மூலவர் பெயர்

சிவசுப்பிரமணியர் சுயம்பு 

அம்பாள் பெயர்

 வள்ளி, தேவசேனா 

உற்சவர் பெயர்

சிவசுப்ரமணியர் 

இதர சந்நிதிகள்

விநாயகர், இடும்பன், நவகிரகம், ஆஞ்சிநேயர், தண்டாயுதபாணி, காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, பைரவர், துர்கை, பத்துமலை முருகர், பெருமாள்.

பிரதிஷ்டை விவரம்

சுமார் 1000 வருடங்களுக்கு முன்தோன்றியது. 

சிவன் கோவில் எனில்

ஆகமம் 

பெருமாள் கோவில் எனில்

-----------

முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது

13 கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், தேரோட்டம், கந்தஷஷ்டி,தீர்த்தவாரி படிவிழா, (ஜனவரி முதல் நாள்)

ஸ்தல விருட்சம்

வில்வமரம், அரசமரம் 

திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்

தீர்த்தம்: பிரம்மதீர்த்தம், சிவகங்கை

திருக்குளம்: சூரிய புஷ்கரணி தீர்த்தம் 

பூந்தோட்டம்: சந்திர புஷ்கரணி குளம் 

பசுமடம்     : இல்லை 

பஜனைமடம்: இல்லை 

இதரவகை   :

பிராசீனமான உபகோயில்கள்

இல்லை 

அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்

இந்து அறநிலயத்துறை உட்பட்டது.

அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது

உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்
------------

அர்ச்சகர் விவரம்:  சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்

சிவாச்சார்யார் 

அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்

N. சுந்தரமூர்த்தி  குருக்கள்.9487229930 

திருகோயில் நித்திய பூஜை விவரம்

காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 6 மணிக்கு 

கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை: 07:00-12:00 மாலை:4:00 - 06:30 

ஸ்தல வரலாறு
சுயம்பு 27 நட்சத்திரங்கள் பிரம்மா பூஜித்ததாக ஐதீகம், சிவனை முருகன் நித்தியம் பூஜித்ததாகஐதீகம். 27 நட்சத்திரங்கள் தோஷ பரிகார ஸ்தலம்.

நகைகள் இல்லாத கோயிலா?

ஆம்.

ஆக்ராஹாரம் உள்ளதா?

இல்லை:

எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?

​5 குடும்பங்கள்.

சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?

இல்லை.

இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்

சந்திரசேகர குருக்கள், சங்கர குருக்கள், ஜயக்குமார் குருக்கள், முத்துக்குமார சாமி குருக்கள், பசுபதி குருக்கள், சுந்தரமூர்த்தி குருக்கள்.

பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை

போளூர் - செங்கம் செல்லும் வழி 

அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்

கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்

செயாரு, எலத்தூர், மோட்டூர்  

இதர குறிப்புகள்

தகவல் அளித்தவர்: N. சுந்தரமூர்த்தி குருக்கள், 9487229930

----------------------------------------------------------------------------------------------------------------

3

வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியசாமி  திருக்கோயில்- காட்டுப்புத்தூர் 

மாவட்டம் ​

திருவண்ணாமலை 

வட்டம்

திருவண்ணாமலை 

முக்கியத்துவம்

பிரம்மா பூஜித்த தலம், தேவகிரி மலை 

நகரம்/கிராமத்தின் பெயர்

காட்டுபுத்தூர், தேவனாம் பட்டு 

திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்

திருவண்ணாமலை வேலூர் செல்லும் சாலை, திருவண்ணாமலையில் இருந்து 15 கி. மீ. வழி, ஊசாம்பாடி 

இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா

திருவண்ணாமலை 

திருக்கோயில் பெயர்

வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியசாமி  திருக்கோயில்- காட்டுப்புத்தூர் 

மூலவர் பெயர்

சிவசுப்ரமணியர் 

அம்பாள் பெயர்

 வள்ளி தேவசேனா 

உற்சவர் பெயர்

சண்முகர் (ஆறுமுகசாமி)

இதர சந்நிதிகள்

விநாயகர், இடும்பன், நவகிரகம்.

பிரதிஷ்டை விவரம்

350 ஆண்டுகள் 

சிவன் கோவில் எனில்

ஆகமம் 

பெருமாள் கோவில் எனில்

------------

முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது

கிருத்திகை, கந்தசஷ்டி 

ஸ்தல விருட்சம்

வில்வமரம் 

திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்

தீர்த்தம்: சண்முக தீர்த்தம் 

திருக்குளம்: உள்ளது 

பூந்தோட்டம்:உள்ளது

பசுமடம்     :உள்ளது

பஜனைமடம்:உள்ளது

இதரவகை   :

பிராசீனமான உபகோயில்கள்

முத்தாலம்மான், மாரியம்மன், காளியம்மன், ஐயர் விநாயகர், வேடியப்பன் 

அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்

இந்துசமய அறநிலயத்துறை 

அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது

உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்
துணை ஆணையர் 

அர்ச்சகர் விவரம்:  சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்

அர்ச்சகர்: N. சுந்தரமூர்த்தி குருக்கள் 9487229930 

அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்

கார்த்திகேய குருக்கள், தேவனாம்பட்டு 

திருகோயில் நித்திய பூஜை விவரம்

காலை மாலை பூஜை 

கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை: 07:00 -10:00 மாலை:04:00-06:00
ஸ்தல வரலாறு
பிரம்மா ஷண்முகரை பூஜித்த தலம், சிவசக்தி தோஷம் நிவர்த்தி. 

நகைகள் இல்லாத கோயிலா?

நகைகள் இல்லை.

ஆக்ராஹாரம் உள்ளதா?

இல்லை:

எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?

இரண்டு 

சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?

எதுவும் இல்லை 

இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்

ஒருவர் 

பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை

திருவண்ணாமலையிலிருந்து டவுன் பஸ் 50, 51 

அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்

நீளம் உள்ளது, ஆண்டு வருமானம் 12 ஆயிரம் ரூபாய் 

கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்

நான்கு ஏரி, ஐந்து குளம் 

இதர குறிப்புகள்

----------------------------------------------------------------------------------------------------------------

4

மருந்தீஸ்வரர்  திருக்கோயில்

மாவட்டம்

திருவண்ணாமலை 

வட்டம் 

திருவண்ணாமலை

முக்கியத்துவம்

சூரியன் பூஜித்த தலம் 

நகரம்/கிராமத்தின் பெயர்

மருத்துவாம்பாடி 

திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்

திருவண்ணமாலை-வேலூர் செல்லும் சாலையில் உள்ளே 3 கி. மீ. கொண்டம் உள்ளே செல்லவேண்டும் 

இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா

திருவண்ணாமலை 

திருக்கோயில் பெயர்

மருந்தீஸ்வரர் ஆலயம் 

மூலவர் பெயர்

மருந்தீஸ்வரர் 

அம்பாள் பெயர்

மங்களாம்பிகை 

இதர சந்நிதிகள்

பெருமாள், லக்ஷ்மி, நவகிரகம், ஆத்மநாதன், நடராஜர், யோகாம்பிகை, ரேணுகாம்பாள் 

பிரதிஷ்டை விவரம் 

200 ஆண்டுகள் 

சிவன் கோவில் எனில்

ஆகமம் 

பெருமாள் கோவில் எனில்

முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது

பௌர்ணமி, சிவராத்திரி அன்னாபிஷேம், பிரதோஷம் 

ஸ்தல விருட்சம்

மருதமரம் 

திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்

தீர்த்தம்: 

திருக்குளம்: உள்ளது 

பூந்தோட்டம்:

பசுமடம்     :

பஜனைமடம்:

இதரவகை   :

பிராசீனமான உபகோயில்கள்

அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்

கிராம நிர்வாகம் 

அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது

உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்

அர்ச்சகர் விவரம்:  சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்

இல்லை 

அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்

சாமியார்-7708504487 

திருகோயில் நித்திய பூஜை விவரம்

ஒரு காலம் 

கோயில் திறந்திருக்கும் நேரம்
 
காலை:08:00-1000 மாலை:
 
ஸ்தல வரலாறு
சூரியன் பூஜை செய்த தலம். மண்மேடு இடது இருந்த இடத்தை மக்கள் தோண்டி அருகில் கல்வெட்டு பார்த்து புதிதாக கட்டி உள்ளனர். 

நகைகள் இல்லாத கோயில?

நகைகள் இல்லை 

ஆக்ராஹாரம் உள்ளதா?

ஆம்:        இல்லை:

எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?

இல்லை 

சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?

இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்

இல்லை 

பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை

திருவண்ணாமலை -கொண்டம் 

அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்

இல்லை 

கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்

குளம்-1, ஏரி -1 

இதர குறிப்புகள்

திருக்கோயில் மண்மேட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சிவன் 

----------------------------------------------------------------------------------------------------------------

5

ஆவடி நாதர்  திருக்கோயில்

மாவட்டம்

திருவண்ணாமலை 

வட்டம் 

கலசப்பாக்கம் 

முக்கியத்துவம்

​மிக பழமையான சிவத்தலம் 

நகரம்/கிராமத்தின் பெயர

வில்வாரணி 

திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்

போரூர்-செங்கம் வழி , கலசப்பாக்கத்திலிருந்து 5  கி. மீ தொலைவில் 

இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா

போரூர் 

திருக்கோயில் பெயர்

ஆவடிநாதர் ஆலயம் 

மூலவர் பெயர்

ஆவடிநாதர் 

அம்பாள் பெயர்

சுந்தராம்பாள் 

உற்சவர் பெயர் 

சந்திரசேகரர் 

இதர சந்நிதிகள்

பிள்ளையார், முருகன், நவகிரகம் மற்றும் பரிவார சந்நிதிகள் 

பிரதிஷ்டை விவரம் 

 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது 

சிவன் கோவில் எனில்

ஆகமம் 

பெருமாள் கோவில் எனில்

முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது

சித்திரை பிரம்ம உற்சவம், அன்னாபிஷேகம், சிவராத்திரி, பிரதோஷம்   

ஸ்தல விருட்சம்

வில்வமரம் 

திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்

தீர்த்தம்: செய்யாறு 

திருக்குளம்:உள்ளது 

பூந்தோட்டம்:இல்லை 

பசுமடம்     :இல்லை 

பஜனைமடம்:இல்லை 

இதரவகை   :

பிராசீனமான உபகோயில்கள்

பெருமாள் கோயில் 

அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்

தர்மகர்த்தா

அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது

உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்
பரம்பரை அறங்காவலர், தர்மகர்த்தா 

அர்ச்சகர் விவரம்:  சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்

அர்ச்சகர் 

அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்

ஜெயக்குமார் குருக்கள், விலவாராணி, போரூர்  

திருகோயில் நித்திய பூஜை விவரம்

இரண்டு கால பூஜை 

கோயில் திறந்திருக்கும் நேரம்
 
காலை:08:00-1000 மாலை:05:00-00
 
ஸ்தல வரலாறு
பழமை வாய்ந்த சிவத்தலம் 

நகைகள் இல்லாத கோயிலா? 

ஆம் 

ஆக்ராஹாரம் உள்ளதா?

 இல்லை:

எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?

ஒன்று 

சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?

இல்லை 

இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்

இல்லை 

பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை

கலசப்பாகம் - செங்கம் செல்லும் வழி 

அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்

இல்லை 

கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்

செய்யாறு , குளம் உள்ளது 

இதர குறிப்புகள்

----------------------------------------------------------------------------------------------------------------

6

பலக்ராதீஸ்வரர் திருக்கோயில்

மாவட்டம்

திருவண்ணாமலை 

வட்டம் 

கலசப்பாக்கம் 

முக்கியத்துவம்

முருகன் சிவனை பூஜித்த தலம் 

நகரம்/கிராமத்தின் பெயர்

பழங்கோயில் 

திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்

போரூர்-செங்கம் சாலையில் கலசப்பாக் கத்திலிருந்து 3 கி. மீ தொலைவில் 

இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா

போரூர் 

திருக்கோயில் பெயர்

பலக்ராதீஸ்வரர் திருக்கோயில் 

மூலவர் பெயர்

பலக்ராதீஸ்வரர்

அம்பாள் பெயர்

பாலாம்பிகை

உற்சவர் பெயர்

சந்திரசேகரர் 

இதர சந்நிதிகள்

பிள்ளையார், முருகன், நவகிரகம் மற்றும் பரிவார சந்நிதிகள் 

பிரதிஷ்டை விவரம்

1000 ஆண்டு பழமை வாய்ந்தது 

சிவன் கோவில் எனில்

ஆகமம் 

பெருமாள் கோவில் எனில்

முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது

அன்னாபிஷேகம், சிவராத்திரி, பிரதோஷம் 

ஸ்தல விருட்சம்

வில்வமரம் 

திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்

தீர்த்தம்: செய்யாறு 

திருக்குளம்:உள்ளது 

பூந்தோட்டம்:உள்ளது 

பசுமடம்     :இல்லை 

பஜனைமடம்:இல்லை 

இதரவகை   :

பிராசீனமான உபகோயில்கள்

இல்லை 

அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்

கிராம நிர்வாகம் 

அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது

உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்

கிராம நிர்வாகம் 

அர்ச்சகர் விவரம்:  சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்

அர்ச்சகர் 

அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்

A. சந்திரா சேகர சிவாச்சார்யார், பழங்கோயில், போரூர்  

திருகோயில் நித்திய பூஜை விவரம்

இரண்டு காலம் 

கோயில் திறந்திருக்கும் நேரம்
 
காலை:08:00-1000மாலை:05:00-000
 
ஸ்தல வரலாறு
முருகன் வழிபட்ட தலம் 

நகைகள் இல்லாத கோயிலா? 

இல்லை 

ஆக்ராஹாரம் உள்ளதா?

இல்லை:

எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?

ஒன்று 

சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?

இல்லை 

இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்

இல்லை 

பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை

கலாசப்பாக்கம் -செங்கம் 

அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்

கிராம நிர்வாகம் 

கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்

செய்யாறு, குளம், ஏரி 

இதர குறிப்புகள்

----------------------------------------------------------------------------------------------------------------

7

செம்மேஸ்வரர் திருக்கோயில்

மாவட்டம்

திருவண்ணாமலை 

வட்டம் 

திருவண்ணாமலை 

முக்கியத்துவம்

செம்மேஸ்வரர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் 

நகரம்/கிராமத்தின் பெயர்

சேம்மேடு 

திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்

திருவண்ணாமலை -செஞ்சி செல்லும் சாலையில் 20 கி. மீ தோழவில் உள்ளது 

இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா

திருவண்ணாமலை 

திருக்கோயில் பெயர்

செம்மேஸ்வரர் (லிங்கம் சதுரகிரி), மீனாட்சி சுந்தரேஸ்வரர் 

மூலவர் பெயர்

செம்மேஸ்வரர் 

அம்பாள் பெயர்

மீனாட்சி 

இதர சந்நிதிகள்

விநாயகர், அம்பாள், நவகிரகம் 

பிரதிஷ்டை விவரம் 

1000 வருடம் 

சிவன் கோவில் எனில்

ஆகமம் 

பெருமாள் கோவில் எனில்

முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது

மஹா சிவராத்திரி, அன்னாபிஷேகம் 

ஸ்தல விருட்சம்

வில் வமரம் 

திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்

தீர்த்தம்: சிவகுலம், பிரம்மா புனித நீராடிய குளம் 

திருக்குளம்:5 குளங்கள் உள்ளன 

பூந்தோட்டம்:

பசுமடம்     :

பஜனைமடம்:

இதரவகை   :

பிராசீனமான உபகோயில்கள்

புதிதாக கட்டப்பட்ட பிரதிங்கா கோயில் 

அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்

அறநிலயத்துறை 

அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது

உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்
கிராம பொதுமக்கள் 

அர்ச்சகர் விவரம்:  சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்

அர்ச்சகர் இல்லை, சாமியார் பூஜை 

அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்

திருகோயில் நித்திய பூஜை விவரம்

நித்திய பூஜை 

கோயில் திறந்திருக்கும் நேரம்
 
காலை: மாலை:
 
ஸ்தல வரலாறு
 
ஆக்ராஹாரம் உள்ளதா?

இல்லை:

எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?

இல்லை 

சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?

இல்லை 

இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்

இல்லை 

பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை

திருவண்ணாமலை -செஞ்சி நெடுஞ்சாலை 

அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்

கோயில் நீளம் உள்ளது 

கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்

இதர குறிப்புகள்

பிரம்மாவை சனி பகவான் பிடிக்க வாந்த பொது செம்மேட்டில் பிரம்மா சிவனை அடைந்து பூஜித்தார், சனி பகவான் உள்ளே செல்ல முடியாமல் அக்னி ரூபாமாக காட்சி தந்தார். 

---------------------------------------------------------------------------------------------------------------

8

அக்னீஸ்வரர் எனும் கைலாசநாதர் திருக்கோயில்

மாவட்டம்

திருவண்ணாமலை 

வட்டம் 

கலசப்பாக்கம் 

முக்கியத்துவம்

அக்னீஸ்வரர் எனும் கைலாசநாதர், பிரகண் நாயகி 

நகரம்/கிராமத்தின் பெயர்

தாமரைப்பாக்கம் 

திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்

போளூர் -கலசப்பாக்கம்-செங்கம் செல்லும் வழி 

இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா

போளூர்-20 கி. மீ 

திருக்கோயில் பெயர்

அக்னீஸ்வரர் எனும் கைலாசநாதர் 

மூலவர் பெயர்

கைலாசநாதர் 

அம்பாள் பெயர்

பிரகண் நாயகி 

உற்சவர் பெயர் 

இதர சந்நிதிகள்

விநாயகர், முருகர், நவகிரகம் 

பிரதிஷ்டை விவரம் 

1000 வருடம்  

சிவன் கோவில் எனில்

ஆகமம் 

பெருமாள் கோவில் எனில்

முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது

பழமையான கோயில், முருகன் சிவானை பூஜித்த தலம் 

ஸ்தல விருட்சம்

வில்வமரம் 

திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்

தீர்த்தம்: செய்யாறு 

திருக்குளம்:உள்ளது 

பூந்தோட்டம்:

பசுமடம்     :

பஜனைமடம்:

இதரவகை   :

பிராசீனமான உபகோயில்கள்

அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்

அறநிலையத்துறை

அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது

உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்
கிராம பொதுமக்கள் 

அர்ச்சகர் விவரம்:  சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்

அர்ச்சகர் 

அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்

கிருபாகர  குருக்கள், கடலாடி, கலசப்பாக்கம் 

திருகோயில் நித்திய பூஜை விவரம்

ஒரு கால பூஜை 

கோயில் திறந்திருக்கும் நேரம்
 
காலை: 08:00-10:00 மாலை:
ஸ்தல வரலாறு
முருகர் சிவனை பூஜித்த தலம் 

நகைகள் இல்லாத கோயிலா?

இல்லை 

அக்ராஹாரம் உள்ளதா?

இல்லை:

எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?

ஒன்று 

சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?

இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்

பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை

போளூர் -கலசப்பாக்கம் -செங்கம் செல்லும் வழி 

அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்

நிலம் உள்ளது 

கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்

செய்யாறு, ஏரி, குளம் உள்.

இதர குறிப்புகள்

-----------------------------------------------------------------------------------------------------------

9

தாண்தோண்டீஸ்வரர் திருக்கோயில் (கைலாசநாதர் இரண்டாவது தலம் )

மாவட்டம்

திருவண்ணாமலை 

வட்டம் 

செங்கம் 

முக்கியத்துவம்

தாண்தோண்டீஸ்வரர் கைலாசநாதர் இரண்டாவது தலம் 

நகரம்/கிராமத்தின் பெயர்

ஒரந்தவாடி 

திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்

திருவநாமலையிலிருந்து காஞ்சி செல்லும் வழி 

இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா

செங்கம் -25 கி. மீ 

திருக்கோயில் பெயர்

தாண்தோண்டீஸ்வரர் கைலாசநாதர் திருக்கோயில் 

மூலவர் பெயர்

தாண்தோண்டீஸ்வரர் கைலாசநாதர்

அம்பாள் பெயர்

பிரகண் நாயகி 

உற்சவர் பெயர் 

சந்திரசேகரர் 

இதர சந்நிதிகள்

விநாயகர், நவகிரகம் 

பிரதிஷ்டை விவரம்

1000 வருடம் 

சிவன் கோவில் எனில்

ஆகாமம் 

பெருமாள் கோவில் எனில்

முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது

முருகர் சிவனை வழிபட்ட தலம் 

ஸ்தல விருட்சம்

மகிட மரம் 

திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்

தீர்த்தம்: செய்யாறு தீர்த்தம் 

திருக்குளம்:

பூந்தோட்டம்:

பசுமடம்     :

பஜனைமடம்:உள்ளது 

இதரவகை   :

பிராசீனமான உபகோயில்கள்

ஒரகண்டியம்மன் திருத்தலம் 

1000 கணக்கான பக்தர்கள் வழிபடும் திருத்தலம் 

அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்

---------------

அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது

உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்
கிராம பொதுமக்கள் கட்டுப்பாட்டில் 

அர்ச்சகர் விவரம்:  சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்

அர்ச்சகர் 

அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்

கண்ணன் குருக்கள் -ஒரந்தவாடி கிராமம் 

திருகோயில் நித்திய பூஜை விவரம்

ஒருகாலம் 

கோயில் திறந்திருக்கும் நேரம்
 
காலை:08:00-10:00 மாலை:
 
ஸ்தல வரலாறு
முருகர் சிவனை வழிபட்ட தலம் 

ஆக்ராஹாரம் உள்ளதா?

இல்லை:

எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?

ஒருவர் 

சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?

இல்லை 

இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்

பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை

திருவண்ணாமலை -காஞ்சிபுரம் செல்லும் வழி 

அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்

நிலம் உள்ளது 

கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்

செய்யாறு, குளம், ஏரி 

இதர குறிப்புகள்

--------------------------------------------------------------------------------------------------------

10

கைலாச நாதர் திருக்கோயில்

மாவட்டம்

திருவண்ணாமலை 

வட்டம் 

​கலசப்பாக்கம் 

முக்கியத்துவம்

சிவகத்தி தோஷம் போக்க முருகப்பெருமான் சிவபெருமானை வழிபட்ட தலம் 

நகரம்/கிராமத்தின் பெயர்

​சிறுவள்ளூர்  

திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்

போளூர் மேல் சோழங்குப்பம் - 14 கி. மீ தொலைவில் உள்ளது 

இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா

திருக்கோயில் பெயர்

கைலாசநாதர் ஆலயம் 

மூலவர் பெயர்

கைலாசநாதர் 

அம்பாள் பெயர்

ஸ்ரீ காமாட்சி அம்மன் 

உற்சவர் பெயர் 

சந்திரசேகர் 

இதர சந்நிதிகள்

விநாயகர், பைரவர்,காசிவிஸ்வநாதர், முருகர், தட்சிணாமூரத்தி  

பிரதிஷ்டை விவரம்

1000 ஆண்டு பழமை வாய்ந்தது 

சிவன் கோவில் எனில்

ஆகமம் 

பெருமாள் கோவில் எனில்

----------------

முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது

சிவராத்திரி, நவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம் 

ஸ்தல விருட்சம்

திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்

தீர்த்தம்: 

திருக்குளம்:உள்ளது 

பூந்தோட்டம்:உள்ளது 

பசுமடம்     :

பஜனைமடம்:

இதரவகை   :

பிராசீனமான உபகோயில்கள்

பெருமாள் கோயில், விநாயகர் கோயில்  

அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்

அறநிலையத்துறை

அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது

உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்
 
அர்ச்சகர் விவரம்:  சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்

அர்ச்சகர் 

அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்

ராமகிருஷ்னன் 

திருகோயில் நித்திய பூஜை விவரம்

கோயில் திறந்திருக்கும் நேரம்
 
காலை:08:00-10:00 மாலை:05:00-0830
 
ஸ்தல வரலாறு
ஆதிசங்கரர் வழிபட்ட தலம், முருகப் பெருமான் தோஷம் நீங்க வழிபட்டதாக கல்வெட்டு உள்ளது

ஆக்ராஹாரம் உள்ளதா?

இல்லை:

எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?

 10 குடும்பங்கள் 

சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?

10 குடும்பங்கள் வெளியூரில் உள்ளனர் 

இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்

பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை

பஸ் வசதி உள்ளது 

அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்

நிலம் உள்ளது, பூந்தோட்டம் உள்ளது 

கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்

ஆறு ஏரி குளங்கள் உள்ளன 

இதர குறிப்புகள்

ராஜகோபுரம் 2013 ல் கட்டப்பட்டது 

------------------------------------------------------------------------------------------------

bottom of page